ETV Bharat / sports

இபிஎல்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்!

author img

By

Published : Jan 13, 2021, 1:25 PM IST

இபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பார்ன்லி எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Premier League: Pogba scores winner as United beat Burnley 1-0

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி - பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது.

பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதின. இதில் இரு அணிகளும் தங்களது வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தினால் ஒருவருக்கு ஒருவர் கோலடிக்க விடாமல் தடுத்தனர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.

அதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில், சிறப்பாக செயல்பட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் பால் போக்பா மூலம் முதல் கோல் கிடைத்தது. பின்னர் தொடர்ந்து முயற்சித்த பார்ன்லி அணி இறுதிவரை போராடியும் கோலடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பார்ன்லி எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இபிஎல் புள்ளிப்பட்டியலில் 36 புள்ளிகளைப் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி முதலிடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: விக்கெட்டுடன் கம்பேக் கொடுத்த ஸ்ரீசாந்த்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.