ETV Bharat / sports

பிரீமியர் லீக்: பார்ன்மவுத் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அசத்தல் வெற்றி!

author img

By

Published : Jul 6, 2020, 5:38 AM IST

இங்கிலாந்தின் இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடரின் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-2 என்ற கோல் கணக்கில், பார்ன்மவுத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

premier-league-mason-greenwood-double-helps-manchester-united-to-5-2-win-over-bournemouth

2019-20ஆம் ஆண்டு சீசனுக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துத் தொடர், இங்கிலாந்தில் பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று முன் தினம் (ஜுலை 4) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, பார்ன்மவுத் அணியை எதிர்த்து விளையாடியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடிய பார்ன்மவுத் அணியின் ஜூனியர் ஸ்டானிஸ்லாஸ் 16ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மான்செஸ்டர் அணியின் கிரீன்வுட் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்திலும், ராஷ்போர்ட் 35ஆவது நிமிடத்திலும், மரசியல் 45ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினர்.

இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் அணி 3-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அதிரடி காட்டிய மான்செஸ்டர் அணியின் கிரீன்வுட் 54ஆவது நிமிடத்திலும், ஃபெர்னான்டோஸ் 59ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இருப்பினும், இறுதிவரை போராடிய பார்ன்மவுத் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன்முலம் மான்செஸ்டர் யுனைடெட் அணி 5-2 என்ற கோல்கணக்கில் பார்ன்மவுத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியை ஈட்டியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.