யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள் கடந்த வாரம் ஐரோப்பாவில் தொடங்கி நடைபெற்றுவருகின்றன. ஃபிரான்ஸ் கால்பந்து வீரர் பால் போக்பா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மேசையின் மேல் வைக்கப்பட்டிருந்த ஹெய்னிகன் பீர் பாட்டிலை ஒதுக்கிவைத்துவிட்டு அவர் பேட்டியளித்தார்.
இந்தக் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. போக்பா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிவருபவர். இஸ்லாம் மது அருந்துவதைத் தடை செய்வதால், மதத்தைப் பின்பற்றி அவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை ஒதுக்கிவைத்து தண்ணீரைக் குடியுங்கள் என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் உலக அளவில் பேசுபொருளானது. இதற்குப் பின்னர் கோகோ கோலா நிறுவனம் சரிவைச் சந்தித்தது.
தற்போது ரொனால்டோவைத் தொடர்ந்து போக்பாவும் பீர் பாட்டிலை ஒதுக்கிவைத்துள்ளார். யூரோ கால்பந்து 2020 போட்டிகளுக்கான, முக்கிய ஸ்பான்ஷராக கோகோ கோலா நிறுவனமும் ஹெய்னிகன் நிறுவனமும் பல ஆண்டு காலமாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தண்ணியைக் குடி' - ரொனால்டோவின் மாஸ் பதிலால் சரிவைச் சந்தித்த கோகோ கோலா