பராகுவே நாட்டைச் சேர்ந்த பிரபலமான கால்பந்து தடுப்பாட்ட வீரர் பாப்லோ ஆகுய்லார் (Pablo Aguilar). பாராகுவே அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2018ஆம் ஆண்டிலிருந்து மெக்சிகோவிலுள்ள க்ருஸ் அஸூல் கிளப் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில், வடக்கு, மத்திய அமெரிக்க மற்றும் கரீபயன் கால்பந்து (CONCACAF) கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், ஜமைக்காவின் போர்ட்மோர் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் க்ருஸ் அஸூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது
இதனிடையே இப்போட்டியில் க்ருஸ் அஸூல் அணிக்காக விளையாடிய பாப்லோ ஆகுய்லாரின் வலது காலில் காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து அவர் பாதியிலேயே விலகினார். இதைத்தொடர்ந்து, அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் எடுத்து பார்த்ததில் தெரியவந்ததது. எனவே அவர் மருத்துவர்களின் அறிவுறுத்தலோடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். 32 வயதான பாப்லோ ஆகுய்லார், க்ருஸ் அஸூல் அணிக்காக 60 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: யு17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: மும்பையில் இறுதி போட்டி!