ETV Bharat / sports

ஜெர்மனியில் மே 16 முதல் பண்டஸ்லிகா தொடர் தொடக்கம்! - Bundesliga Points table

கரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜெர்மனியின் பண்டஸ்லிகா கால்பந்து சீசன் வரும் மே16ஆம் தேதி பார்வையாளர்களின்றி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OFFICIAL: Bundesliga to restart from May 16

author img

By

Published : May 8, 2020, 7:26 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இப்பெருந்தாற்றால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், யூரோ கோப்பை, அந்தந்த நாட்டின் லீக் தொடர்களும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஜெர்மனியில் கரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துவருகிறது.

பண்டஸ்லிகா
பண்டஸ்லிகா

இதனால், நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2019-20 சீசனுக்கான பண்டஸ்லிகா தொடர் மே 16ஆம் தேதி பார்வையாளர்களின்றி தொடங்கும் என ஜெர்மன் கால்பந்து லீக் தெரிவித்துள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய கண்டங்களில் ஜெர்மனியில்தான் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் கால்பந்து லீக் தொடர் மீண்டும் தொடங்கவுள்ளது.

வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி உதவியாளர்கள் ஆகியோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் அணி, யுனின் பெர்லின் அணியுடன் மோதவுள்ளது.

2019-20 சீசனுக்கான புள்ளிகள் பட்டியலில் நடப்பு சாம்பியன் பேயர்ன் முனிச் அணி 25 போட்டிகளில் விளையாடி 17 வெற்றி, நான்கு தோல்வி, நான்கு டிரா என 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, புரோஷியா டார்ட்மெண்ட் அணி 25 போட்டிகளில் 51 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டுவந்த டிபாலா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.