இந்தியாவின் கால்பந்து திருவிழாவான ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திலிருக்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி, ஐந்தாம் இடத்திலிருக்கும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
பாம்போலியம் ஜி.எம்.சி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
மும்மை சீட்டி எஃப்சி:
நடப்பு சீசனில் தொடக்கம் முதல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை சிட்டி எஃப்சி அணி தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.
நடப்பு சீசன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 30 புள்ளிகளைப் பெற்றுள்ள மும்பை சிட்டி எஃப்சி அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. ஏறத்தாள பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள மும்பை சிட்டி அணி, தனது வெற்றி பாதையை தக்கவைத்துக் கொள்ளூம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
நார்த் ஈஸ்ட் யுனைடெட்:
இந்த சீசனின் தொடக்கத்தில் தடுமாறிய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தற்போது தொடரின் இரண்டாம் பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறது.
18 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் இருக்கும் நார்த் ஈஸ்ட் அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று, டாப் 3 இல் இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது போட்டி முடிவுக்கு பிறகே தெரியவரும்.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் உள்ளூர் போட்டிகள் தொடக்கம் : பிசிசிஐ அறிவிப்பு!