மும்பை மாவட்ட கால்பந்து சங்கம் (எம்.டி.எஃப்.ஏ ) சார்பில் ஆடவர் கால்பந்து அணிகளுக்கான எம்.டி.எஃப் ஏ எலைட் டிவிசன் கால்பந்து போட்டி மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. இதனிடையே, டிசம்பர் 11ஆம் தேதி பாந்த்ராவில் நடைபெற்ற லீக் போட்டியில் 18 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை சிட்டி எஃப்சி அணி 0-1 என்ற கோல் கணக்கில் கர்நாடகா எஸ்.ஏ அணியிடம் தோல்வியடைந்தது.
போட்டி முடிவடைந்தபிறகு, மும்பை வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு உதவி நடுவர் உமேஷ் படேலை திட்டியுள்ளனர். இதன் விளைவாக, 18 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை சிட்டி வீரர்கள் 10 பேருக்கு இந்தத் தொடரில் பங்கேற்க ஓராண்டு இடைக்கால தடை விதித்தும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபாராதம் செலுத்த வேண்டும் என்றும் மும்பை மாவட்ட கால்பந்து சங்கம் உத்தரவிட்டது.
அதேபோல், அந்த அணியின் கோல்கீப்பர் அப்துல் காதிர், உடற்பயிற்சி நிபுணர் (Physiotherapist) ஆகியோருக்கு ஓராண்டு காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தலா 25 ஆயிரம் ரூபாய் அபாரதம் செலுத்த வேண்டும் என்றும், மும்பை மாவட்ட கால்பந்து சங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மும்பையில் இளம் வீரர்களுக்கான கால்பந்து விளையாட்டை மேம்படுத்தும்விதமாக, இந்த தொடரில் முதல்முறையாக 18 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை சிட்டி எஃப்சி அணி பங்கேற்கும் தகுதியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 17 வயதில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் சாதனைப் படைத்த பார்சிலோனா வீரர்!