அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது 13ஆவது வயதிலிருந்து பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடிவருகிறார். 21 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறுகிறார்.
இந்நிலையில், அணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக செய்தியாளர்களை மெஸ்ஸி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரும் என நினைக்கவில்லை. இந்த கிளப்புக்குள் வந்த முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையிலும் என்னால் முடிந்தவற்றை கொடுத்திருக்கிறேன்.
- — FC Barcelona (@FCBarcelona_es) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
— FC Barcelona (@FCBarcelona_es) August 8, 2021
">— FC Barcelona (@FCBarcelona_es) August 8, 2021
பல ஆண்டுகள் இந்த கிளப்புடன் ஒன்றாக இருந்தது என் வாழ்க்கையே தந்துவிட்டு இப்போது இதைவிட்டு பிரிவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நான் மனதளவில் இதற்கு தயாராக இல்லை.
பார்சிலோனா அணியில் இருப்பதற்கு நான் அணைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இதற்காக எனது ஊதியத்திலிருந்து 50 விழுக்காடு குறைக்கவும் முடிவு செய்தேன். ஆனால் நான் வாங்கும் ஊதியத்தைவிட கூடுதலாக 30 விழுக்காடு கேட்பதாக வரும் செய்திகள் பொய்.
எனக்கு சில நேரம் நன்றாக இருந்தது. அதே போல் கெட்ட நேரத்தையும் எதிர் கொண்டேன். ஆனால் ரசிகர்கள் என்னிடம் காட்டிய அன்பு எப்போது ஒன்று போலவே இருந்தது. எனது பெயரை உற்சாகமாக கூச்சலிடும் ரசிகர்கள் தற்போது இங்கு இல்லை.
இது கவலை அளிக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை பார்க்க முடியாச சூழலில் இப்போது விடைபெறுகிறேன். இந்த அணியில் என்னுடன் விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் நன்றி என்று உணர்ச்சிகரமாக பேசினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்திக்கும் முன்பு மெஸ்ஸி மேடையில் கண்கலங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மெஸ்ஸி சிறுவயதில் ஹார்மோன் டிபிஷியன்ஸி எனப்படும் வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரது உடல் வளர்ச்சி தடைப்பட்டது. அவர் வளர வேண்டுமானால் தினமும் ஒரு ஊசி போட மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அப்போது ஊசி வாங்க மெஸ்ஸியின் தந்தையிடம் போதிய பணம் இல்லை.
இந்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக மெஸ்ஸி விளையாட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவருக்கு உதவியது.
பார்சிலோனா கால்பந்து அணியிலிருந்து வெளியேறிய மெஸ்ஸி, லீக் 1 கிளப் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மன் கிளப் அணியில் சேர உள்ளதாக தெரியவருகிறது.