ETV Bharat / sports

கால்பந்து: லா லிகா சாம்பியன் பட்டத்தை நோக்கி பார்சிலோனா! - சுவாரஸ்

பார்சிலோனா: லா லிகா கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மேட்ரிட்டை வீழ்த்தியது.

லா லிகா சாம்பியன் பட்டத்தை நோக்கி பார்சிலோனா
author img

By

Published : Apr 7, 2019, 4:29 PM IST

ஸ்பெயினின் லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, அத்லெடிக்கோ மேட்ரிட் அணியை எதிர்கொண்டது.

நடப்பு சீசனில் பார்சிலோனா அணி 69 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அத்லெடிக்கோ மேட்ரிட் அணி 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்ததால், இவ்விரு அணிகள் மோதிய இந்தப் ஆட்டத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். 28ஆவது நிமிடத்தில் அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் டியாகோ கோஸ்டா பார்சிலோனா வீரர்களிடம் முறைகேடாக நடந்துகொண்டதால், நடுவர் அவருக்கு ரெட் வழங்கினார். இதனால், அத்லெடிக்கோ மேட்ரிட் அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பந்தை தன் வசதப்படுத்தியே விளையாடிய பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, சுவராஸ் ஆகியோர் பல முறை கோல் கம்பத்தை நோக்கி அடித்த ஷாட்டை அத்லெடிக்கோ மேட்ரிட் அணியின் கோல்கீப்பர் ஒபிளாக் தடுத்தார்.

இதனால், ஆட்டம் கோலின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பார்சிலோனா வீரர் சுவாரஸ் அதிர்ச்சி அளித்தார். 85ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, 86ஆவது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மிரட்டலான கோல் ஒன்றையும் அடித்தார். இதனால், பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அத்லெடிக்கோ மேட்ரிட் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம், மூன்று புள்ளிகளைப் பெற்ற பார்சிலோனா அணி தற்போது 72 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால், லா லிகா கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.