ETV Bharat / sports

ஓய்வுபெற்ற மாஸ்செரானோவுக்கு மெஸ்ஸி, நெய்மர், ஸாவி பாராட்டு...! - நெய்மர்

சமீபத்தில் அனைத்துவிதமான கால்பந்து போட்டிகளிலில் இருந்தும் ஓய்வை அறிவித்த மாஸ்செரானோவை பாராட்டி நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், ஸாவி ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.

messi-neymar-and-xavi-hail-retired-mascherano

author img

By

Published : Nov 17, 2020, 6:35 PM IST

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்காக 147 போட்டிகளில் பங்கேற்றவர் மாஸ்செரானோ. இவர் 16 ஆண்டுகளாக தேசிய அணிக்காக ஆடியுள்ளார். அதேபோல் பார்சிலோனா அணிக்காகவும் 9 ஆண்டுகள் ஆடியவர். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் ஹாம், லிவர்பூல், சீனாவின் ஹெபெய் ஃபார்சூன் என பல்வேறு கிளப்களுக்காகவும் ஆடியுள்ளார்.

2004,2008ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம், 2 சாம்பியன் லீக், 7 லாலிகா, 2 கிளப் உலகக்கோப்பை என 21 முன்னணி கோப்பைகளை ஆடிய அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அனைத்துவிதமான கால்பந்து போட்டிகளிலும் இருந்தும் நேற்று ஓய்வை அறிவித்தார். இதனால் இவருடன் ஆடிய சக வீரர்கள் தங்களது நினைவுகளையும், பாராட்டுக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இவரைப் பற்றி நட்சத்திர வீரர் மெஸ்ஸி, '' தேசிய அணிக்காக 14 ஆண்டுகள் ஒன்றாக ஆடியுள்ளோம். ஒவ்வொரு நாளும், நாம் நம்மை பார்த்துக் கொண்டே முன்னேறியுள்ளோம்'' என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பார்சிலோனாவின் மற்றொரு நட்சத்திர வீரர் ஸாவி கூறுகையில், '' நாம் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக ஆடியபோது பல சந்தோஷங்களையும், சோகங்களையும் பகிர்ந்துள்ளோம். பார்சி. அணியிலிருந்து விலகியது முதலே உங்களை அதிகமாக மிஸ் செய்தோம். உங்களுடன் கால்பந்து ஆடியது எங்களுக்கு பெருமை. தனித்துவமான தலைமைப் பண்புகளை உங்களிடம் பார்த்துள்ளோம்'' என்றார்.

இவரைப் பற்றி நட்சத்திர வீரர் நெய்மர் கூறுகையில், '' ஒரு வீரராகவும், ஒரு மனிதராகவும் நீங்கள் தனித்துவமானவர்'' என புகழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் தொடர் : புள்ளிவிவரங்கள் மூலம் ஒரு பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.