ETV Bharat / sports

லா லிகா: மெஸ்ஸியின் அடுத்தடுத்த கோல்களால் பார்சிலோனா வெற்றி! - அத்லெடிக் கிளப்

லா லிகா கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Breaking News
author img

By

Published : Jan 7, 2021, 9:52 AM IST

ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லா லிகா விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று (ஜன.07) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - அத்லெடிக் கிளப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டி ஆரம்பித்த 3ஆவது நிமிடத்திலேயே அத்லெடிக் கிளப் அணியின் வில்லியம்ஸ் கோலடித்து கணக்கைத் தொடங்கிவைத்தார். பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய பார்சிலோனா அணிக்கு ஆட்டத்தின் 14ஆவது நிமிடம் பெட்ரி மூலம் கோல் கிடைத்தது.

பார்சிலோனா கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியோனல் மெஸ்ஸி 62ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

அதன்பின் தோல்வியைத் தவிர்க்க போராடிய அத்லெடிக் கிளப் அணிக்கு ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் இக்கர் முனெய்ன் கோலடித்தார். ஆயினும் அந்த அணியால் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி கோலடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அத்லெடிக் கிளப் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா புள்ளிப்பட்டியளில் 31 புள்ளிகளைப் பெற்று பார்சிலோனா அணி 3ஆம் இடத்திற்கு முன்னெறியது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல்: முதல் வெற்றிக்கு போராடும் ஒடிசா எஃப்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.