கால்பந்து அரங்கில் பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி தலைசிறந்த வீரர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பந்தை கன்ட்ரோல் செய்வது, பாஸ் செய்வது, ட்ரிபிள் செய்து கோல் அடிப்பது என அனைத்தும் அவரது காலுக்கு வந்த கலை. இந்த நிலையில், ஸ்பெயினில் நடைபெற்றுவரும் நடப்பு லா லிகா கால்பந்துத் தொடரில், அவர் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். இதுவரை பார்சிலோனா அணி விளையாடிய நான்கு லீக் போட்டிகளிலும் அவர் விளையாடாததால், மிட் ஃபீல்டர் செர்ஜியோ புஸ்கட்ஸ் கேப்டனாக இருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில், குரூப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள பார்சிலோனா அணி தனது முதல் போட்டியில் பொரிஷியா டார்ட்மண்ட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தப் போட்டிக்கான 22 வீரர்கள் கொண்ட பார்சிலோனா அணி அறிவிக்கப்பட்டதில், மெஸ்ஸியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், நிச்சயம் அவர் இப்போட்டியில் களமிறங்குவார் என கூறப்படுகிறது.
இரண்டு பெரிய அணிகள் மோதும் இப்போட்டியை பார்க்க கால்பந்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர். காயத்தில் மீண்டு வரும் மெஸ்ஸி இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பார்சிலோனா அணி இறுதியாக 2015இல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
-
📋 [SQUAD LIST]
— FC Barcelona (@FCBarcelona) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
⚽ #BVBBarça
✈ See who’s making the list for our @ChampionsLeague opener! 👇 pic.twitter.com/ZXoQAvoBMM
">📋 [SQUAD LIST]
— FC Barcelona (@FCBarcelona) September 16, 2019
⚽ #BVBBarça
✈ See who’s making the list for our @ChampionsLeague opener! 👇 pic.twitter.com/ZXoQAvoBMM📋 [SQUAD LIST]
— FC Barcelona (@FCBarcelona) September 16, 2019
⚽ #BVBBarça
✈ See who’s making the list for our @ChampionsLeague opener! 👇 pic.twitter.com/ZXoQAvoBMM
பார்சிலோனா அணி விவரம்: டெர் ஸ்டேகன் (கோல்கீப்பர்), செமேடோ, ஜெரார்ட் பிக்கே, இவான் ராகிடிச், செர்ஜியோ புஸ்கட்ஸ், ஆர்துர் மெலோ, சுவாரஸ், மெஸ்ஸி, நெடோ, லெங்க்லட், க்ரீஸ்மேன், ஜோர்டி ஆல்பா, கார்லெஸ் அலினா, எம். வாஹ், டோபிடோ, செர்ஜியோ ரொபர்டோ, டி ஜாங், அர்துர் விடால், அன்சூ ஃபாட்டி, கார்லெஸ் பெரேஸ், ஜூனியர், இனாகி பெனா.