ETV Bharat / sports

1000 கோல்... கால்பந்து வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த மெஸ்ஸி!

author img

By

Published : Feb 23, 2020, 10:08 PM IST

கால்பந்து போட்டியில் 1000 கோல் அடிப்பதில் ஈடுபட்ட முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி படைத்துள்ளார்.

Messi became the first player to involve in 1000 goal contribution

நடப்புச் சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி, எய்பார் அணியுடன் மோதியது. பார்சிலோனா அணி இந்தச் சீசனில் 52 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ரியல் மாட்ரிட்டைவிட ஒரு புள்ளி பின்தங்கி இரண்டாவது இடத்தில் இருந்தது. இதனால், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடிக்க பார்சிலோனா அணி இப்போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே பார்சிலோனா அணி வழக்கம்போல பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடியது. குறிப்பாக, அந்த அணியின் கேப்டனான மெஸ்ஸி ஆட்டத்தின் 14, 37, 40, 87 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம், கடந்த நான்கு போட்டிகளில் கோல் அடிக்காமல் இருந்ததற்கு இப்போட்டியில் மெஸ்ஸி நான்கு கோல் அடித்து ஈடுசெய்துள்ளார்.

மெஸ்ஸி

இதுமட்டுமின்றி, சர்வதேச போட்டிகள், கிளப் போட்டிகள் என 1000 கோல் அடிப்பதில் ஈடுபட்ட முதல் வீரர் என்ற புதிய உலகச் சாதனையை அவர் படைத்தார். மெஸ்ஸி இதுவரை அர்ஜென்டினா நாட்டிற்காகவும், பார்சிலோனா கிளப் அணிக்காகவும் 696 கோல்களை அடித்தது மட்டுமின்றி 306 அசிஸ்டுகளையும் வழங்கி தான் ப்ளே மேக்கர் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார்.

மெஸ்ஸியின் காலுக்கு வந்த பந்தை எய்பார் அணியின் தடுப்பாட்ட வீரர்களால் தடுக்க முடியாமல் திணறினர். இறுதியில், பார்சிலோனா அணி இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் எய்பார் அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணியிடம் தோல்வியடைந்தது.

இதனால், பார்சிலோனா அணி இந்தச் சீசனில் விளையாடிய 25 போட்டிகளில் 17 வெற்றி, நான்கு டிரா, நான்கு தோல்வி என 55 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மறுமுனையில், ரியல் மாட்ரிட் அணி 25 போட்டிகளில் 15 வெற்றி, எட்டு டிரா, இரண்டு தோல்வி என 53 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மெஸ்ஸியின் இந்தச் சாதனையைக் கண்டு கால்பந்து வல்லுநர்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது புருவத்தை உயர்த்தியுள்ளனர். ஆறு பலான் டி ஆர், ஆறு ஃபிபாவின் சிறந்த வீரர், ஆறு கோல்டன் பூட் உள்ளிட்ட விருதுகளை வென்ற மெஸ்ஸி, கடந்தாண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான லாரஸ் விருதைப்பெற்றார். இதன்மூலம், இந்த விருதைப்பெற்ற முதல் கால்பந்து வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: மெஸ்ஸி என்னும் மாயக்காரன் உருவான கதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.