உலகின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரும், பார்சிலோனா அணியின் கேப்டனுமாக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. நேற்று முன்தினம் (ஜனவரி 18) நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் பார்சிலோனா அணி - அத்லெடிகோ பில்பாவோ அணியுடன் மோதியது.
இப்போட்டியில் அத்லெடிக் பில்பாவோ அணி 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியின் இறுதி நிமிடத்தின் போது பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி எதிரணியின் ஆசியர் வில்லலிப்ரேவை தாக்கினார். இதனையடுத்து மெஸ்ஸிக்கு களநடுவர் ரெட் கார்டு வழங்கினார்.
-
Lionel Messi Red Card pic.twitter.com/HjC23gszvR
— MESSI IS THE BEST (@bestismessi) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lionel Messi Red Card pic.twitter.com/HjC23gszvR
— MESSI IS THE BEST (@bestismessi) January 17, 2021Lionel Messi Red Card pic.twitter.com/HjC23gszvR
— MESSI IS THE BEST (@bestismessi) January 17, 2021
அதேசமயம் பார்சிலோனா அணிக்காக 2001ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் லியோனல் மெஸ்ஸி, முதல் முறையாக கள நடுவரிடம் ரெட் கார்டினை பெற்றது ஆவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் வீரரிடன் பந்து இல்லாத சமயத்தில் அவரை தாக்கிய லியோனல் மெஸ்ஸிக்கு 12 ஆட்டங்கள் வரை பங்கேற்க தடைவிதிக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சியடைய செய்திருந்தது.
இந்நிலையில், லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்படும் முதல் ரெட் கார்டு ஃபவுல் இது என்பதால், அவர் இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்க தடைவிதித்து ஸ்பானீஷ் கால்பந்து கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், நாளை மறுநாள் (ஜன.22) கோபா டெல் ரே தொடரில் பங்கேற்கும் பார்சிலோனா அணி - கார்னெல்லா அணியுடன் மோதவுள்ளது.
இதையும் படிங்க: 'வரலாற்று நிகழ்வை கொண்டாடுங்கள்' - டெஸ்ட் தொடர் வெற்றி குறித்து கோலி பெருமிதம்!