கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 16ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா), உலக சுகாதார அமைப்பு (டபியூ.எச்.ஓ) ஆகியவை இணைந்து காணொலி ஒன்றைத் தயாரித்துள்ளன.
இந்தக்காணொலியில் கால்பந்து நட்சத்திரங்களான மெஸ்ஸி, கியான்லூகி பஃப்பன், அலிசன் பெக்கர், மைக்கேல் ஓவன், கேரி லின்கர் ஆகியோரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிட்-19 குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஃபிஃபாவிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு ஃபிஃபாவும் தங்களது அதரவை தந்துள்ளது என்றும் பதிவிட்டு, அதனுடன் ‘கரோனாவை விரட்டுவோம்’ என்ற தலைப்பில் காணொலியையும் வெளியிட்டுள்ளது.
ஃபிஃபா, உலக சுகாதார அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ‘கரோனாவை விரட்டுவோம்’ விழிப்புணர்வு காணொலி கால்பந்து ரசிகர்கள், பொதுமக்கள் என பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:பயிற்சியாளராக மாறிய ‘ஹிட்மேன்’ - ரசிகர்கள் உற்சாகம்!