இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் இன்று (ஜன.27) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி எஃப்சி அணி - வெஸ்ட் போர்ம் எஃப்சி அணியை எதிர்த்து விளையாடியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் 6ஆவது நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி அணியின் இல்கே குண்டோகன் (İlkay Gündoğan) கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் ஜோவா கேன்செலோ மூலம் லெய்செஸ்டர் அணிக்கு மீண்டுமொரு கோல் கிடைத்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குண்டோகன் ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து, முதல் பாதி ஆட்டத்திலேயே அணியின் வெற்றியை உறுதி செய்தார். பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நேரமான 45+2ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணிக்கு ரியாத் மஹ்ரேஸ் மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது.
இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவிலேயே மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஏறத்தாள வெற்றியை உறுதிசெய்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் தனது கோல் வேட்டையைத் தொடர்ந்த மான்செஸ்டர் அணிக்கு ரஹீம் ஸ்டெர்லிங் மூலம் 57ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலும் கிடைத்தது.
-
Brushing aside the Baggies! 🔥
— Manchester City (@ManCity) January 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Q27itniAnl
">Brushing aside the Baggies! 🔥
— Manchester City (@ManCity) January 27, 2021
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Q27itniAnlBrushing aside the Baggies! 🔥
— Manchester City (@ManCity) January 27, 2021
🔷 #ManCity | https://t.co/axa0klD5re pic.twitter.com/Q27itniAnl
ஆட்டத்தின் இறுதிவரை போராடிய வெஸ்ட் போர்ம் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் சிட்டி எஃப்சி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் போர்ம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் 41 புள்ளிகளைப் பெற்று மான்செஸ்டர் சிட்டி எஃப்சி அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் : ஏடிகேவிற்கு அதிர்ச்சியளித்த நார்த் ஈஸ்ட்!