இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்கள் களைகட்டியுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணி - வெஸ்ட் போர்ம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
ஆரம்பம் முதலே தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய லீட்ஸ் அணிக்கு ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே ரோமைன் சாயர்ஸ் கோலடித்து, அணியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து ஆட்டத்தின் 31, 36, 40ஆவது நிமிடங்களில் லீட்ஸ் அணியின் அலியோஸ்கி, ஜாக் ஹாரிசன், ரோட்ரிகோ ஆகியோர் அடுத்தடுத்த கோல்களை அடித்து எதிரணியினரைத் திணறச் செய்தனர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் லீட்ஸ் யுனைடெட் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் லீட்ஸ் அணியின் ராபின்ஹா கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதற்கிடையில் வெஸ்ட் போர்ம் அணி கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும், லீட்ஸ் அணியின் டிஃபென்ஸால் தகர்க்கப்பட்டது.
-
😍 Gotta love that style!
— Leeds United (@LUFC) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">😍 Gotta love that style!
— Leeds United (@LUFC) December 29, 2020😍 Gotta love that style!
— Leeds United (@LUFC) December 29, 2020
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் லீட்ஸ் யுனைடெட் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் போர்ம் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் லீட்ஸ் யுனைடெட் அணி 23 புள்ளிகளுடன் இபிஎல் புள்ளிப்பட்டியலில் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:வார்னேவின் கருத்தை ஏற்க மறுத்த கம்மின்ஸ்!