ETV Bharat / sports

கால்பந்து வீரர்களிடம் நடைபெற்ற வழிப்பறி - குற்றவாளிக்கு பத்தாண்டு சிறை! - ஸ்மித்திற்கு பத்து ஆண்டு சிறை தண்டனை

லீட்ஸ்: அர்செனல் கால்பந்து வீரர்களான ஓசில், சீட் கோலசினக் ஆகியோரின் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை திருட முயன்ற வழக்கில் ஸ்மித் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Man jailed for 10 years for attempted robbery
author img

By

Published : Nov 9, 2019, 4:18 PM IST

கால்பந்து விளையாட்டில் அர்செனல் கால்பந்து கிளப்பானது இங்கிலாந்தில் மிக பிரபலமானது. இந்த அர்செனல் அணிக்காக விளையாடிவரும் ஓசில், கோலசினக் ஆகிய இருவரும் லண்டனுக்கு காரில் சென்றுள்ளனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தலைக்கவசம் அணிந்த இருவர் கத்தியைக் காட்டி கால்பந்து வீரர்களிடமிருந்த கைக்கடிகாரங்களைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது வீரர்கள் இருவரும் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்து, காவல் துறையில் புகார் அளித்தனர்.

அதன்பின் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த ஆஷ்லே ஸ்மித் என்பவரை கைது செய்து விசாரித்தது. விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரை லண்டன் காவல் துறையினர் ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்மித்திற்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும் 181 டாலர் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஆஷ்லே ஸ்மித் இதுவரை 38 முறை கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு, அதில் 20 முறை சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நடுவரின் அலட்சியம்: சமனில் முடிந்த கேரளா-ஒடிசா போட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.