ETV Bharat / sports

சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியை மாட்ரிட்டில் நடத்த மேயர் விருப்பம்!

author img

By

Published : Jun 10, 2020, 8:43 AM IST

ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட்டில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு நகர நிர்வாகம் முழு ஆதரவுடன் இருப்பதாக, மேயர் ஜோஸ் லூயிஸ் மார்டினெஸ்-அல்மெய்டா (Jose Luis Martinez-Almeida ) தெரிவித்துள்ளார்.

Madrid mayor expresses interest to host Champions League final  (16:01)

ஐரோப்பிய யூனியன் கால்பந்து சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போடப்பட்டுள்ள சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான இறுதிப்போட்டி நடத்தப்படும் இடம் முடிவுசெய்யப்படும். இந்தப் போட்டி நடைபெறும் நாட்டில்தான் காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடத்த வேண்டும் என நகரத்தின் மேயர் ஜோஸ் லூயிஸ் மார்டினெஸ் அல்மெய்டா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான இறுதிப் போட்டியை நடத்தும் முனைப்பில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் போட்டியை நடத்துவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.

மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பாதுகாப்பு, அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவருகின்றோம். அதுமட்டுமில்லாமல் தற்போது மாட்ரிட் கரோனா வைரஸ் (தீநுண்மி) இல்லா நகரமாக மாறிவரும் சூழ்நிலையில், நாங்கள் இப்போட்டியை நடத்த முழு ஆதரவைத் தெரிவிக்கிறோம்" என்றார்.

முன்னதாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியானது துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக சாம்பியன்ஸ் லீக் தொடர் 16 சுற்றுகளோடு ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, தற்போது அத்தொடரின் இறுதிப் போட்டிக்கான இடத்தையும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு மாற்றி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.