ETV Bharat / sports

700ஆவது போட்டி...  சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை... மெஸ்ஸி ஸ்பெஷல்!

author img

By

Published : Nov 28, 2019, 7:19 PM IST

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்துத் தொடரில் புரோஷியா டார்ட்மண்ட் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம், பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Messi
Messi

கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டனான மெஸ்ஸி, தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் தான் தலைசிறந்த வீரர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறார். பார்சிலோனா அணிக்காக கோல் அடிப்பது, அணியின் மற்ற வீரர்களை கோல் அடிக்க உதவுவது (அசிஸ்ட்) என கடந்த சில சீசனன்களாக பார்சிலோனா அணியின் ப்ளே மேக்கராகவும் இருக்கும் அவர் ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Messi
மெஸ்ஸி

நடப்பு சீசனுக்கான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் குரூப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில், குரூப் எஃப் பிரிவின் நேற்றைய ஆட்டத்தில், பார்சிலோனா அணி, புரோஷியா டார்ட்மண்ட் அணியைச் சந்தித்தது. பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடும் 700ஆவது போட்டி இதுவாகும். இதன் மூலம், பார்சிலோனா அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர்களின் பட்டியலில் மெஸ்ஸி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் முன்னாள் வீரர் ஸாவி 767 போட்டிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Messi
மெஸ்ஸியின் கோல்

மெஸ்ஸியின் 700ஆவது போட்டி என்பதால், வழக்கம் போலவே அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் இப்போட்டி பார்சிலோனாவின் சொந்த மைதானம் கேம்ப் நெளவில் நடைபெற்றதால், அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடியது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மெஸ்ஸி ஒரு கோல், இரண்டு அசிஸ்ட்டுகளை ஏற்படுத்தித் தந்தார். இதனால், பார்சிலோனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் டார்ட்மண்ட் அணியை வீழ்த்தியது.

Messi
மெஸ்ஸி- க்ரீஸ்மேன்-சுவாரஸ்

மெஸ்ஸியின் உதவியால் ஸ்ட்ரைக்கர் சுவாரஸ் 29ஆவது நிமிடத்திலும், க்ரீஸ்மேன் 73ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மெஸ்ஸி, டார்ட்மண்ட் அணிக்கு எதிரான இப்போட்டியில் கோல் அடித்ததன் மூலம், ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் தொடரில் 34 எதிரணிகளுக்கு எதிராக கோல் அடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே அதிகமான எதிரணிகளுக்கு எதிராக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: மெஸ்ஸியின் முதல் மேஜிக்!

மெஸ்ஸியைத் தொடர்ந்து, யுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, முன்னாள் ரியல் மாட்ரிட் வீரர் ரவுல் ஆகியோர் (33 எதிரணிகளுக்கு எதிராக கோல்) இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். மெஸ்ஸியின் 700ஆவது போட்டியில் இந்த சாதனைப் படைக்கப்பட்டது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஸ்பெஷலான தருணமாக அமைந்துள்ளது. பார்சிலோனா அணிக்காக 700 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 40 ஹாட்ரிக் கோல்கள் உட்பட இதுவரை 613 கோல்கள் அடித்ததுமட்டுமின்றி, 237 அசிஸ்டுகளை ஏற்படுத்தித் தந்துள்ளார்.

Messi
மெஸ்ஸியின் புள்ளியியல்

பார்சிலோனா அணி இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் லீக் குரூப் எஃப் பிரிவில் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு டிரா என 11 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: https://www.etvbharat.com/tamil/tamil-nadu/briefs/brief-news/magician-messi-turns-32-today-1/tamil-nadu20190624210053858

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.