கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 15ஆவது ஆட்டத்தில் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.
மோகன் பகானுக்கு இது மூன்றாவது வெற்றி, ஒடிசா இரண்டாவது தோல்வியைத் தழுவியது. இரு அணிகளுமே தலா மூன்று ஆட்டங்கள் விளையாடியுள்ளன.
கோவாவின் மர்காவ் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் இறுதிக்கட்டம் வரை இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில், கடைசி நேரத்தில் மோகன் பகான் கோல் அடித்து வெற்றிபெற்றது. போட்டி தொடங்கியதுமுதல் விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் நான்காவது நிமிடத்தில் ஒடிசாவும், 8ஆவது நிமிடத்தில் மோகன் பாகனும் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைத் தவறவிட்டன.
தொடர்ச்சியாக ஒடிசா அணி கோல் வாய்ப்புக்கு அதிகமுறை முயற்சித்தும் நூலிழையில் தவறவிட்டது. மோகன் பகான் அணி சிறப்பான தடுப்பாட்டத்தால் ஒடிசாவை கோல் கணக்கைத் தொடங்கவிடாமல் தடுத்தது. பதிலுக்கு மோகன் பகானுக்கு ஒடிசாவும் கோல் வாய்ப்பை வழங்காமல் சிறப்பாக ஆடியது.
-
The #Mariners make it 3! 💚❤️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Roy & Arindam make it 3 in 3! 🤩
And it's a winning pass for Tiri! 🙌#ATKMohunBagan #JoyMohunBagan #ATKMBOFC #IndianFootball pic.twitter.com/nBf6Ud6Z2j
">The #Mariners make it 3! 💚❤️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 3, 2020
Roy & Arindam make it 3 in 3! 🤩
And it's a winning pass for Tiri! 🙌#ATKMohunBagan #JoyMohunBagan #ATKMBOFC #IndianFootball pic.twitter.com/nBf6Ud6Z2jThe #Mariners make it 3! 💚❤️
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) December 3, 2020
Roy & Arindam make it 3 in 3! 🤩
And it's a winning pass for Tiri! 🙌#ATKMohunBagan #JoyMohunBagan #ATKMBOFC #IndianFootball pic.twitter.com/nBf6Ud6Z2j
முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் அடிக்காமல் நிறைவுசெய்தாலும், 2ஆவது பாதியிலும் இரு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தும் கோல் வாய்ப்பைப் பெற முடியாத அளவிற்குத் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். கோல் இல்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் மோகன் பகான் அணி கோல் அடித்து ஆட்டத்தை நிறைவுசெய்தது.
-
A frustrating night at Fatorda. 😔#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/9lfx667JQv
— Odisha FC (@OdishaFC) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A frustrating night at Fatorda. 😔#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/9lfx667JQv
— Odisha FC (@OdishaFC) December 3, 2020A frustrating night at Fatorda. 😔#OdishaFC #AmaTeamAmaGame #HeroISL pic.twitter.com/9lfx667JQv
— Odisha FC (@OdishaFC) December 3, 2020
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட மோகன் பகான் வீரர் திரீ ஒடிசா வீரர்களுக்குப் போக்குக்காட்டி பந்தை உதைக்க, அதை லாவகமாகத் தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் ராய் கிருஷ்ணா திருப்பினார். இதன்மூலம் ஏடிகே மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வென்றது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2021இல் புதிதாக இரண்டு அணிகளா? பிசிசிஐ சொல்வது என்ன!