இத்தாலியிl கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சீரி ஏ கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நடப்பு சாம்பியன் யுவென்டஸ் அணி தனது முதல் ஆட்டத்தில், நபோலி அணியை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் யுவென்டஸ் அணி அட்டாக்கிங் முறையில் ஆடியது. இதனால், 16ஆவது நிமிடத்தில் டேனிலோ கோல் அடித்து யுவென்டஸ் அணிக்கு முன்னிலைதந்தார். பின்னர், 16ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஸ்ட்ரைக்கர் ஹிகுவைன் அட்டாகசமாக கோல் அடித்தார்.
இதைத்தொடர்ந்து, 62ஆவது நிமிடத்தில் ரொனால்டோ தன்பங்கிற்கு கோல் அடிக்க, யுவென்டஸ் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான நிலையில் இருந்தது. பின்னர், ஆட்டத்தில் எழுச்சி பெற்ற நபோலி அணி சிறப்பாக விளையாடியது. 66ஆவது நிமிடத்தில் கோஸ்டாஸ் மனோலாஸ், 68ஆவது நிமிடத்தில் ஹிர்விங் லொசானோ ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து நபோலி அணியின் கோல் ஸ்கோரை இரண்டாக்கினர்.
பின்னர், 81ஆவது நிமிடத்தில் நபோலி அணிக்கு கிடைத்த ஃப்ரீ கிக்கை, ஜியோவானி டி லொரென்சோ கோல் அடிக்க ஆட்டம் 3-3 என்ற சமநிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டம் 90 நிமிடத்தை எட்டிய நிலையில், கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது, ஆட்டத்தின் இறுதித் தருணத்தில் யுவென்டஸ் அணியின் ஃப்ரீ கிக்கை தடுக்க முயன்ற நபோலி வீரர் கலிடோவின் காலில் பட்டு செல்ஃப் கோலானது. இதனால், நபோலி அணி 3-4 என்ற கோல் கணக்கில் துரதிர்ஷ்டமாக தோல்வியை தழுவியது.