கரோனா பாதுகாப்புச் சூழலுடன் கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் லீக் ஆட்டங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் இரு அணியும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டது. தொடர்ந்து இரு அணிகளும் கோலடிக்க முயற்சித்தன. இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலேதுமின்றி சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு, ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் அங்கித் ஜாதவ் கோலடித்து அசத்தினார். அதன்பின் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கோலடிக்க முயற்சித்த அனைத்து யுக்திகளையும் எதிரணி டிஃபெண்டர்கள் தகர்த்தனர்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி 10 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: அஸ்வின் சுழலில் திணறும் ஆஸ்திரேலியா!