2019-20 சீசனுக்கான கோப்பா இத்தாலி கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மிலனில் நடைபெற்றது. இதில், யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகள் மோதின. முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், இரண்டாம் பாதி ஆட்டம் சுடுபிடிக்கத் தொடங்கியது. ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் ஏசி மிலன் வீரர் ஆன்டே ரெபிக் கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிய 19 நிமிடங்கள் இருந்த நிலையில், யுவென்டஸ் வீரர் டிபாலாவை தாக்கியதால் ஏசி மிலன் அணியின் டிஃபெண்டர் தியோ ஹெர்னான்டஸுக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டு களத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, ஏசி மிலன் அணி 10 வீரர்கள் கொண்டு விளையாடிய போதும், அதை சாதகமாக பயன்படுத்தி யுவென்டஸ் அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டம் 90 நிமிடங்கள் எட்டிய நிலையில், கூடுதலாக ஆறு நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இதனால், ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் யுவென்டஸ் அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. குறிப்பாக, யுவென்டஸ் அணியின் கோல் பகுதியில் (டி பாக்ஸ்) டிபாலா அடித்த பந்து, ஏசி மிலன் வீரர் டேவிட் கெலபிரியாவின் கை மீது பட்டதால் யுவென்டஸ் அணிக்கு உதவி நடுவர் முறையில் பெனால்டி வழங்கப்பட்டது.
-
Ronaldo 🚀#MilanJuve #CoppaItalia #ForzaJuve pic.twitter.com/TB0rXq2TKa
— JuventusFC (@juventusfcen) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ronaldo 🚀#MilanJuve #CoppaItalia #ForzaJuve pic.twitter.com/TB0rXq2TKa
— JuventusFC (@juventusfcen) February 13, 2020Ronaldo 🚀#MilanJuve #CoppaItalia #ForzaJuve pic.twitter.com/TB0rXq2TKa
— JuventusFC (@juventusfcen) February 13, 2020
இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட யுவென்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அதனை கோலாக மாற்றினார். இதனால், யுவென்டஸ் - ஏசி மிலன் அணிகளுக்கு இடையிலான கோப்பா இத்தாலி தொடரின் முதல் அரையிறுதி போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் மார்ச் 5ஆம் தேதி டொரினாவில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: ஒரே கிக்... ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கேரள சிறுவனின் கோல்!