ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல்கட்ட அரையிறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவாவை வீழ்த்தியது.
இந்நிலையில், நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, கொல்கத்தாவுடன் (ஏடிகே) மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 31ஆவது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ஜூவானன் அடித்த பந்தை ஏடிகே கோல்கீப்பர் பிடிக்கத் தவறினார்.
இதனால், அவரது கையிலிருந்து நழுவிவந்த பந்தை பெங்களூரு வீரர் டேஷோர்ன் பிரவுன் லாவகமாக கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் தடுப்பாட்ட வீரர் நிஷு குமார், ஏடிகே வீரர் ராய் கிருஷ்ணாவை ஃபவுல் செய்ததால் அவருக்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார்.
-
Clean sheet ✅
— Indian Super League (@IndSuperLeague) March 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
1⃣ goal advantage ✅
Here's the #ISLRecap of the first semi-final leg between @bengalurufc & @ATKFC 📺
Full highlights 👉 https://t.co/6vBXHDjM4M#BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/vMPEk6xW7P
">Clean sheet ✅
— Indian Super League (@IndSuperLeague) March 1, 2020
1⃣ goal advantage ✅
Here's the #ISLRecap of the first semi-final leg between @bengalurufc & @ATKFC 📺
Full highlights 👉 https://t.co/6vBXHDjM4M#BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/vMPEk6xW7PClean sheet ✅
— Indian Super League (@IndSuperLeague) March 1, 2020
1⃣ goal advantage ✅
Here's the #ISLRecap of the first semi-final leg between @bengalurufc & @ATKFC 📺
Full highlights 👉 https://t.co/6vBXHDjM4M#BFCATK #HeroISL #LetsFootball pic.twitter.com/vMPEk6xW7P
இதன் விளைவாக, பெங்களூரு அணி 10 பேர் கொண்ட அணியுடன் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏடிகே அணி ஆட்டத்தை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களால் இறுதிவரை ஒரு கோல்கூட அடிக்க முடியாமல்போனது. இறுதியில், பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கோல் கணக்கில் முன்னிலை பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்த லிவர்பூல் அணியின் தொடர் வெற்றி!