நடப்பு சீசனுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ISL) தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதின. கொச்சி நேரு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்திலேயே ஹைதராபாத் வீரர் போபோ கோல் அடித்து அசத்தினார்.
இதையடுத்து, ஆட்டத்தில் எழுச்சி பெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேரள அணியின் நட்சத்திர வீரர்களான பார்தோலோமியோ 33ஆவது நிமிடத்திலும், துரோபரவ் 39ஆவது நிமிடத்திலும், ரஃபேல் மெஸ்ஸி பவுலி 45ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடிக்க முதல் பாதி முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் கேரள அணி முன்னிலை பெற்றது.
இதையடுத்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய கேரள அணி 59ஆவது நிமிடத்தில் அந்த அணி வீரர் சைத்யசென் சிங் கோல் அடித்தார். இதையடுத்து, 75ஆவது நிமிடத்தில் மீண்டும் கேரள வீரர் பார்தோலோமியோ தனது இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார். இறுதியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம், கேரளா அணி இந்த சீசனில் ஒன்பது போட்டிகளுக்கு பிறகு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போது அந்த அணி 11 போட்டிகள் விளையாடிய நிலையில், இரண்டு வெற்றி, ஐந்து டிரா, நான்கு தோல்வி என 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
-
📽 | A thumping win in Kochi saw the @KeralaBlasters blast 5⃣ goals past a hapless @HydFCOfficial defence! 💪
— Indian Super League (@IndSuperLeague) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Witness all the goals from #KBFCHFC. ⤵#HeroISL #LetsFootball pic.twitter.com/pox7o8Qlp8
">📽 | A thumping win in Kochi saw the @KeralaBlasters blast 5⃣ goals past a hapless @HydFCOfficial defence! 💪
— Indian Super League (@IndSuperLeague) January 5, 2020
Witness all the goals from #KBFCHFC. ⤵#HeroISL #LetsFootball pic.twitter.com/pox7o8Qlp8📽 | A thumping win in Kochi saw the @KeralaBlasters blast 5⃣ goals past a hapless @HydFCOfficial defence! 💪
— Indian Super League (@IndSuperLeague) January 5, 2020
Witness all the goals from #KBFCHFC. ⤵#HeroISL #LetsFootball pic.twitter.com/pox7o8Qlp8
மறுமுனையில், ஹைதராபாத் எஃப்சி அணி 11 ஆட்டங்களில் ஒரு வெற்றி, இரண்டு டிரா, எட்டு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் கடைசி இடமான 10ஆவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: சிறந்த இளம் வீராங்கனை விருதை தட்டிச்சென்ற கிராமத்துப் பெண்!