இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, எஃப்சி கோவா அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலியே கேரள அணி கோல் அடித்து ஆட்டத்தை மிரட்டலாக தொடக்கியது. த்ரோ மூலம், கிடைத்த வாய்ப்பை கேரள வீரர் செர்ஜியோ சிடோன்சா பயன்படுத்தி அதை கோலாக மாற்றினார்.
இதனால், நேரு கோச்சி மைதானத்திலிருந்த கேரள அணியின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடபடத் தொடங்கினர். இதையடுத்து, கோவா அணிக்கு 42ஆவது நிமிடத்தில் ஃப்ரீகிக் கிடைத்தது. எடு பெடியாவின் க்ராஸோ (Cross) சக வீரர் மோர்டவுடா ஃபால் ஹெட்டர் முறையில் மிரட்டலான கோல் அடித்து முதல் பாதி முடிவில் ஆட்டத்தை சமன் செய்தார்.
இதன்பின் தொடங்கிய இரண்டாம் பாதி கோவா அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கேரள அணியின் ஃபார்வெர்டு வீரர் பார்தோலோமியூ ஒக்பேஷேவை (Bartholomew Ogbeche) ஃபுவல் செய்ததால், கோவா வீரர் மோர்டவுடாவுக்கு நடுவர் ரெட் கார்ட் வழங்கினார். இதனால், கோவா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதையடுத்து ஐந்தே நிமிடங்களில் கேரள வீரர் ரஃபேல் மெஸ்ஸி பவுலி கோல் அடிக்க மீண்டும் கேரள ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆட்டம் 90 நிமிடங்கள் கடந்த நிலையில், ஸ்டாப்பேஜ் டைமாக ஐந்து நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.
ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் கேரள கோல்கீப்பர் ரேஹேனேஷின் அலட்சியத்தால், கோவா வீரர் லென்னி ரோட்ரிகஸ் கோல் அடித்து, கேரள அணிக்கும் அவர்களது ரசிகர்களையும் அப்செட் செய்தார். இதனால், இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
An early goal. A red card. A stoppage-time goal.
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
What a Sunday evening in the #HeroISL 👌
Watch the full match highlights ▶️ https://t.co/DhyxMSivTc#ISLRecap #KBFCFCG #LetsFootball #TrueLove pic.twitter.com/LzQTWh1oMG
">An early goal. A red card. A stoppage-time goal.
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2019
What a Sunday evening in the #HeroISL 👌
Watch the full match highlights ▶️ https://t.co/DhyxMSivTc#ISLRecap #KBFCFCG #LetsFootball #TrueLove pic.twitter.com/LzQTWh1oMGAn early goal. A red card. A stoppage-time goal.
— Indian Super League (@IndSuperLeague) December 1, 2019
What a Sunday evening in the #HeroISL 👌
Watch the full match highlights ▶️ https://t.co/DhyxMSivTc#ISLRecap #KBFCFCG #LetsFootball #TrueLove pic.twitter.com/LzQTWh1oMG
இதன் மூலம், கேரள அணி விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டி டிரா, மூன்று தோல்வி என ஐந்து புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், கோவா அணி ஆறு ஆட்டங்களில் இரண்டு வெற்றி, மூன்று டிரா, ஒரு தோல்வி என ஒன்பது புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஒருவேளை ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கேரள கோல்கீப்பர் அலட்சியம் காட்டாமல் இருந்திருந்தால், கேரள அணி ஏழு புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கும்.
இதையும் படிங்க: 700ஆவது போட்டி... சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை... மெஸ்ஸி ஸ்பெஷல்!