இந்தாண்டு ஐஎஸ்எல் தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இப்போட்டியின் தொடக்க முதலே கோவா அணி அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அதன் பயணாக ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் இகோர் அங்குலா கோலடித்து அணியின் கோல் கணக்கைத் தொடக்கி வைத்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அசத்தலாக விளையாடிய கோவா அணியின் ஜார்ஜ் ஆட்டத்தின் 52ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து இறுதிவரை போராடிய கேரளா அணிக்கு ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் கோமெஸ் மூலம் கோல் கிடைத்தது. ஆனாலும் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+4ஆவது நிமிடத்தில் இகோர் அங்குலா மீண்டுமொரு கோலடித்து அணியின் வெற்றியை உறுதிபடுத்தினார்.
-
First win of the season 🤩
— FC Goa (@FCGoaOfficial) December 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Igor gets a brace whereas @jorgeortiz92 opens his account for the club in a comprehensive 3-1 win over @KeralaBlasters!
Vamos Goa! 🧡#RiseAgain #FCGKBFC #HeroISL pic.twitter.com/RRWS1jJFRv
">First win of the season 🤩
— FC Goa (@FCGoaOfficial) December 6, 2020
Igor gets a brace whereas @jorgeortiz92 opens his account for the club in a comprehensive 3-1 win over @KeralaBlasters!
Vamos Goa! 🧡#RiseAgain #FCGKBFC #HeroISL pic.twitter.com/RRWS1jJFRvFirst win of the season 🤩
— FC Goa (@FCGoaOfficial) December 6, 2020
Igor gets a brace whereas @jorgeortiz92 opens his account for the club in a comprehensive 3-1 win over @KeralaBlasters!
Vamos Goa! 🧡#RiseAgain #FCGKBFC #HeroISL pic.twitter.com/RRWS1jJFRv
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் எஃப்சி கோவா அணி ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலின் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:‘ஆட்டத்தின் நாயகன் நடராஜன்தான்’ - ஹர்திக் பாண்டியா