விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொண்டது.
சுனில் சேத்ரி அசத்தல்
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்டத்தின் 32ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி கோலடித்து அசத்தினார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் ஸ்டீவன் டெய்லர் கோலடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் மீண்டும் அட்டாக்கிங் ஆட்டத்தைக் கையிலெடுத்த பெங்களூரு எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் சில்வா கோலடித்து வெற்றியை உறுதிசெய்தார்.
-
PEEP, PEEP, PEEEEEP! Three points in the bag and the Blues go marching on. #OFCBFC #WeAreBFC pic.twitter.com/r5KgmyVHyb
— Bengaluru FC (@bengalurufc) December 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PEEP, PEEP, PEEEEEP! Three points in the bag and the Blues go marching on. #OFCBFC #WeAreBFC pic.twitter.com/r5KgmyVHyb
— Bengaluru FC (@bengalurufc) December 17, 2020PEEP, PEEP, PEEEEEP! Three points in the bag and the Blues go marching on. #OFCBFC #WeAreBFC pic.twitter.com/r5KgmyVHyb
— Bengaluru FC (@bengalurufc) December 17, 2020
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் பெங்களூரு எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 3ஆம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
சுனில் சேத்ரி சாதனை
இப்போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோலடித்ததன் மூலம், ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 50 கோல்களை அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது அமீர்!