கோவாவில் நடைபெற்று வரும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (பிப்.13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில், சென்னையின் எஃப்சி நேற்றைய போட்டியில் களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய 13ஆவது நிமிடத்திலேயே சென்னை அணியின் ஜாகுப் சில்வெஸ்டர் கோலடித்து அணிக்கு உதவினார்.
அதன்பின்னர் ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திய இகோர் அங்குலோ, கோலடித்து ஆட்டத்தில் சம நிலையை உண்டாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்தன.
பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணி மீண்டுமொரு கோலடித்து வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. அதன்பின் ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+2ஆவது நிமிடத்தில் கோவா அணியின் இஷான் பண்டிதா கோலடித்து, சென்னை அணியின் வெற்றியை நூலிழையில் தட்டிப்பறித்தார்.
-
Points are shared in Bambolim.#AllInForChennaiyin #CFCFCG pic.twitter.com/Sr9t3HTHEO
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Points are shared in Bambolim.#AllInForChennaiyin #CFCFCG pic.twitter.com/Sr9t3HTHEO
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 13, 2021Points are shared in Bambolim.#AllInForChennaiyin #CFCFCG pic.twitter.com/Sr9t3HTHEO
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) February 13, 2021
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்ததால், ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையின் எஃப்சி அணி நடப்பு ஐஎஸ்எல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2ஆவது டெஸ்ட்: அதிரடியில் மிரட்டிய பந்த்; 329 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!