கோவாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்று (பிப்.23) நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமனில் முடிந்தது.
-
ONE STEP CLOSER TO THE DREAM! 🙏🏻 pic.twitter.com/9yNnB1JNus
— NorthEast United FC (@NEUtdFC) February 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ONE STEP CLOSER TO THE DREAM! 🙏🏻 pic.twitter.com/9yNnB1JNus
— NorthEast United FC (@NEUtdFC) February 23, 2021ONE STEP CLOSER TO THE DREAM! 🙏🏻 pic.twitter.com/9yNnB1JNus
— NorthEast United FC (@NEUtdFC) February 23, 2021
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் சுஹார் மூலம் நார்த் ஈஸ்ட் அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அதன்பின் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் சர்தாக் கோலடிக்க, அந்த அணியின் வெற்றி உறுதியானது.
இறுதிவரை போராடிய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சர்தாக் ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இருப்பினும் அந்த அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியளில் 30 புள்ளிகளைப் பெற்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி நடப்பு சீசனுக்கான பிளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்தது.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உபுல் தரங்கா ஓய்வு!