இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி - ஒடிசா எஃப்சி அணியுடன் மோதியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் ஏழாவது நிமிடத்திலேயே கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ஜோர்டன் முர்ரே கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா எஃப்சி அணிக்கு, ஜேக்சன் சிங் 22ஆவது நிமிடத்திலும், ஸ்டீவன் டெய்லர் 42ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணியின் டியாகோ மொரிசியோ போட்டியின் 50 மற்றும் 60ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
பின்னர் தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு ஹூப்பர் 79ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆறுதலளித்தார். இருப்பினும் இறுதிவரை போராடிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியால் அதன்பின் கோல் அடிக்க முடியவில்லை.
-
FULL-TIME | #KBFCOFC @OdishaFC finally claim their first #HeroISL win under Stuart Baxter!#LetsFootball pic.twitter.com/LN5eFgZevF
— Indian Super League (@IndSuperLeague) January 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FULL-TIME | #KBFCOFC @OdishaFC finally claim their first #HeroISL win under Stuart Baxter!#LetsFootball pic.twitter.com/LN5eFgZevF
— Indian Super League (@IndSuperLeague) January 7, 2021FULL-TIME | #KBFCOFC @OdishaFC finally claim their first #HeroISL win under Stuart Baxter!#LetsFootball pic.twitter.com/LN5eFgZevF
— Indian Super League (@IndSuperLeague) January 7, 2021
இதனால் ஆட்டநேர முடிவில் ஒடிசா எஃப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க: IND vs AUS: லாபுசாக்னே, புகோவ்ஸ்கி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!