இந்தியன் சூப்ப்ர லீக் கால்பந்து தொடரில் நேற்று (பிப்.06) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி, ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் ஆரம்பத்திலேயே ஏடிகே அணியின் நட்சத்திர வீரர் மன்வீர் சிங் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரமான 45+1 ஆவது நிமிடத்தில் அலெக்சாண்டர் கோலடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய ஏடிகேவின் மன்விர் சிங் ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். அதன்பின் ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திய நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா கோலடித்தார். அதன்பின் ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்திலும் ராய் கிருஷ்ணா கோலடிக்க, ஏடிகேவின் வெற்றி உறுதியானது. மறுமுனையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த ஒடிசா அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை.
-
A brace from Manvir Singh and Roy Krishna helps us to take all three points at Bambolim! 💚❤️#Mariners, how much did you enjoy this one!? 😍#OdishaFC 1-4 #ATKMohunBagan#OFCATKMB #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/q31ehjHSo0
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A brace from Manvir Singh and Roy Krishna helps us to take all three points at Bambolim! 💚❤️#Mariners, how much did you enjoy this one!? 😍#OdishaFC 1-4 #ATKMohunBagan#OFCATKMB #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/q31ehjHSo0
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 6, 2021A brace from Manvir Singh and Roy Krishna helps us to take all three points at Bambolim! 💚❤️#Mariners, how much did you enjoy this one!? 😍#OdishaFC 1-4 #ATKMohunBagan#OFCATKMB #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/q31ehjHSo0
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 6, 2021
இதனால் ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த சென்னை - பெங்களூரு ஆட்டம்