ETV Bharat / sports

ஐஎஸ்எல் : ஏடிகேவிற்கு அதிர்ச்சியளித்த நார்த் ஈஸ்ட்! - இந்தியன் சூப்பர் லீக்

ஐஎஸ்எல் தொடரில் நேற்று (ஜனவரி 26) நடைபெற்ற லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கணக்கில் ஏடிகே மோகன் பாகன் அணியை வீழ்த்தியது.

ISL 7: Giantkillers NEUFC defeat ATK Mohun Bagan

author img

By

Published : Jan 27, 2021, 8:04 AM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜன.26) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்த சீசனின் பலம் வாய்ந்த அணியான ஏடிகே மோகன் பாகன் அணி; தடுமாறி வரும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தங்களது வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி கோலடிக்கு முயற்சிகளை தடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் வெகுண்டு எழுந்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் டிஃபென்ஸை திணறவைத்தது. இதனால் ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் அந்த அணியின் லூயிஸ் மச்சாடோ கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடிகே அணியின் நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் கோலடிக்க, இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஆட்டம் சூடுபிடித்தது.

அதன்பின் நார்த் ஈஸ்ட் அணியின் ஃபெட்ரிகோ கேலெகோ ஆட்டத்தின் 81ஆவது நிமிடத்தில் கோலடித்து, எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து இறுதிவரை போராடிய ஏடிகே மோகன் பாகன் அணியால் கோலடிக்க முடியவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகனை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது.

இதையும் படிங்க: பத்ம ஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.