ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று (ஜன. 13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஒடிசா எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே சென்னையின் எஃப்சி அணி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த தொட்ஙகியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எஸ்மெயில் கோன்கால்வ்ஸ் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திய எஸ்மெயில் கோன்கால்வ்ஸ் கோலடித்து அசத்தினார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் தோல்வியைத் தவிர்க்க போராடிய ஒடிசா எஃப்சி அணிக்கு ஆட்டத்தின் 63ஆவது நிமிடத்தில் டியாகோ மொரிசியோ மூலம் ஒரு கோல் கிடைத்தது. அதன்பின் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி ஒடிசா அணியால் கோலடிக்க முடியவில்லை.
-
1️⃣st win of 2️⃣0️⃣2️⃣1️⃣
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
1️⃣st win at Bambolim ✅
1️⃣st win over Odisha FC ✅#AllInForChennaiyin #OFCCFC pic.twitter.com/P92VxACr2A
">1️⃣st win of 2️⃣0️⃣2️⃣1️⃣
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 13, 2021
1️⃣st win at Bambolim ✅
1️⃣st win over Odisha FC ✅#AllInForChennaiyin #OFCCFC pic.twitter.com/P92VxACr2A1️⃣st win of 2️⃣0️⃣2️⃣1️⃣
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 13, 2021
1️⃣st win at Bambolim ✅
1️⃣st win over Odisha FC ✅#AllInForChennaiyin #OFCCFC pic.twitter.com/P92VxACr2A
இதனால் ஆட்டநேர முடிவில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற்று சென்னையின் எஃப்சி 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: இபிஎல்: புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்!