ETV Bharat / sports

ஐஎஸ்எல் 2020-21: நார்த் ஈஸ்ட் யுனைடெட் vs மும்பை சிட்டி எஃப்சி!

ஏழாவது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி - மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

ISL 2020-21: NorthEast United FC take on Mumbai City FC

author img

By

Published : Nov 21, 2020, 3:22 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவின் உள்ளூர் கால்பந்து திருவிழாவான இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஏழாவது சீசன் நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியது.

சீசனின் முதல் போட்டியில் மோதிய ஏடிகே மோகன் பாகன் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

இத்தொடரில் இன்று (நவ.21) நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் மோதுகிறது. கோவா மாநிலம் வாஸ்கோவில் அமைந்துள்ள திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

நார்த் ஈஸ்ட் யுனைடெட்:

கடந்த ஐஎஸ்எல் சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக, புள்ளிப்பட்டியலின் ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இதனால் இந்தாண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில், வீரர்கள் ஏலத்தின்போது 19 வீரர்களை தங்கள் வசம் இழுத்துள்ளது. அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு வீரர்கள், திறமையான உள்நாட்டு வீரர்கள் என தேர்வு செய்துள்ள நார்த் ஈஸ்ட் அணி, தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினி ஜெரார்ட் நுஸையும் நியமித்துள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள ஆறு ஐஎஸ்எல் சீசன்களில் ஒரு முறை மட்டுமே நார்த் ஈஸ்ட் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதனால் இந்த சீசனில் கோப்பையை வெல்லும் நோக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி களமிறங்கும் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

மும்பை சிட்டி எஃப்சி:

ஒவ்வோரு ஆண்டும் நட்சத்திர வீரர்களைக் கொண்டு களமிறங்கும் மும்பை சிட்டி எஃப்சி அணி இதுவரை ஒருமுறை கூட ஐஎஸ்எல் கோப்பை வென்றதில்லை. இதனால் நடப்பு ஐஎஸ்எல் சீசனின் வீரர்கள் ஏலத்தின் போது நட்சத்திர வீரர்களை தன்பக்கம் இழுத்துள்ளது. மேலும் அணியின் பயிற்சியாளராக ஸ்பெயினின் செர்ஜியோ லோபராவையும் நியமித்துள்ளது.

கடந்தாண்டு ஐஎஸ்எல் தொடரின் லீக் சுற்றோடு வெளியேறிய மும்பை அணி, இந்த சீசனில் அதிகளவிலான உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

மேலும் பார்தலோமெவ் ஒக்பேச், மொர்தடா ஃபால், ஆடம் லெ ஃபோண்ட்ரே போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்களையும் தங்கள் பக்கம் வைத்துள்ளதால், மும்பை அணியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:‘கோலியை சீண்டாமல் இருந்தால் வெற்றி நமதே’ - ஆலோசனை வழங்கிய கம்மின்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.