ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில், நேற்றைய லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி, ஒடிசா அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளின் கோல்கீப்பர்களுக்கு கோல் தடுப்பதற்கான வேலை அதிகமாகவே இருந்தது. அந்த அளவிற்கு இரு அணிகளும் அட்டாக்கிங் முறையில் விளையாடி கோல் அடிப்பதற்கான முயற்சியில் முழு வீச்சில் களமிறங்கியது.
ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரிக்கு கோல் நோக்கி தான் அடித்த முதல் ஷாட்டை, ஒடிசா அணியின் டிஃபெண்டர் டியாவான்டோ தியாக்னே தடுத்தார். இதையடுத்து, 37ஆவது நிமிடத்தில், பெங்களூரு அணியின் சென்டர் பேக் (டிஃபெண்டர்) ஜூவானன் அடித்த ஷாட்டை, ஒடிசா அணியின் கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் தடுக்க முயன்றார். ஆனால், பந்து கோல் லைன்னை கடந்ததால், அது கோலாக மாறியது.
-
📽 | Check out @juanangonzalez5's goal that gave @bengalurufc their first away win of the season! 💪#OFCBFC #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/T78di6K1Nc
— Indian Super League (@IndSuperLeague) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📽 | Check out @juanangonzalez5's goal that gave @bengalurufc their first away win of the season! 💪#OFCBFC #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/T78di6K1Nc
— Indian Super League (@IndSuperLeague) December 4, 2019📽 | Check out @juanangonzalez5's goal that gave @bengalurufc their first away win of the season! 💪#OFCBFC #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/T78di6K1Nc
— Indian Super League (@IndSuperLeague) December 4, 2019
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடிய ஒடிசா அணிக்கு கோல் அடிப்பதற்கு கிடைத்த ஏரளாமான வாய்ப்புகளை பெங்களூரு அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தடுத்துவிட்டார். அதேசமயம், பெங்களூரு அணியின் கோல் வாய்ப்புகளையும் ஒடிசா அணியின் கோல்கீப்பர் அர்ஷ்தீப் சிங் ப்ளாக் செய்தார். இறுதியில், பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தியது.
இதன் மூலம், பெங்களூரு எஃப்சி அணி விளையாடிய ஏழு போட்டிகளில் மூன்று வெற்றி, நான்கு டிரா என 13 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. மறுமுனையில், ஒடிசா அணி ஏழு போட்டிகளில், ஒரு வெற்றி, மூன்று டிரா, மூன்று தோல்வி என ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: என் கதை முடிவதை நான் அறிவேன் - மெஸ்ஸி