இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி. - அத்லெடிக்கோ கொல்கத்தா அணிகள் விளையாடிவருகின்றன. சென்னை அணி இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு டிரா மட்டும் செய்து இன்னும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் உள்ளது.
சென்னை அணி கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்திருந்தது. அதைத் தொடர்ந்து அந்த அணி மீண்டும் இன்று சென்னையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கியது. இதனால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சென்னை அணி வீரர்கள் போட்டி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கொல்கத்தா வீரர்களும் செயல்பட்டனர். இருப்பினும் சென்னை வீரர்களின் தடுப்பாட்டத்தைத் தாண்டி கொல்கத்தா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இப்போட்டி 0-0 என்ற சமநிலையில் உள்ளது.
-
HT: An exciting half, full of chances for both teams!
— Indian Super League (@IndSuperLeague) October 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Time to see which manager's team talk can inspire a second-half breakthrough. 👊#CHEKOL #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/pggHE41Zmy
">HT: An exciting half, full of chances for both teams!
— Indian Super League (@IndSuperLeague) October 30, 2019
Time to see which manager's team talk can inspire a second-half breakthrough. 👊#CHEKOL #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/pggHE41ZmyHT: An exciting half, full of chances for both teams!
— Indian Super League (@IndSuperLeague) October 30, 2019
Time to see which manager's team talk can inspire a second-half breakthrough. 👊#CHEKOL #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/pggHE41Zmy
இரண்டாவது பாதியில் சென்னை வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டு கோல் அடித்து நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.