இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதன்படி ஜாம்ஷெட்பூர் ஜேஆர்டி டாடா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உள்ளூர் அணியான ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணியும், நடப்பு சாம்பியனுமான பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகள் மோதின. நடப்பு சீசனில் வெற்றியைப் பதிவு செய்யாத பெங்களூரு அணி முதல் வெற்றியை பதிவு செய்யவும், தொடர் வெற்றிகளைக் குவித்த ஜாம்ஷெட்பூர் அணி அடுத்த வெற்றியை நோக்கியும் களமிறங்கின.
இப்போட்டியின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் கோலடிக்கும் முயற்சியில் களமிறங்கினர். ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்தில் அடிக்கப்பட்ட கோலை பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து சிறப்பாக தடுத்தார். இதே போன்று பெங்களூரு அணிக்கு 12ஆவது நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் கோல் கீப்பர் சுபத்ரா பால் தடுத்தார். இது போன்று இரண்டு பக்கத்திலுமிருந்த கோல் கீப்பர்கள் ஸ்ட்ரைக்கர்களின் அனைத்து முயற்சிகளையும் தோல்வியடைய வைத்தனர்.
இதனால் முதல் பாதியின் முடிவில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெங்களூரு அணி கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது. பின்னர் இரண்டாவது பாதியிலும் கோல் கீப்பர்களின் ஆட்டமே தொடர்ந்ததால் இப்போட்டி 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதன்மூலம் ஏழு புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் அணி முதலிடத்துக்குச் சென்றது. விளையாடிய மூன்று போட்டியையும் சமன் செய்த பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.
-
An end-to-end contest sees both @JamshedpurFC and @bengalurufc settle for a point at The Furnace! #JAMBEN #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/QaTzbUnq1d
— Indian Super League (@IndSuperLeague) November 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An end-to-end contest sees both @JamshedpurFC and @bengalurufc settle for a point at The Furnace! #JAMBEN #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/QaTzbUnq1d
— Indian Super League (@IndSuperLeague) November 3, 2019An end-to-end contest sees both @JamshedpurFC and @bengalurufc settle for a point at The Furnace! #JAMBEN #HeroISL #LetsFootball #TrueLove pic.twitter.com/QaTzbUnq1d
— Indian Super League (@IndSuperLeague) November 3, 2019
இப்போட்டியில் அதிக கோல்களைத் தடுத்த ஜாம்ஷெட்பூர் கீப்பர் சுபத்ரா பால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.