கோவாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று (ஜன.18) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை எதிர்கொண்டது.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே டிஃபென்ஸிவ் ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடிக்கும் முயற்சிகளைத் தடுத்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது. இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
-
It ends goalless in Bambolim.#AllInForChennaiyin #CFCSCEB pic.twitter.com/9WsslrwFfw
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It ends goalless in Bambolim.#AllInForChennaiyin #CFCSCEB pic.twitter.com/9WsslrwFfw
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 18, 2021It ends goalless in Bambolim.#AllInForChennaiyin #CFCSCEB pic.twitter.com/9WsslrwFfw
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 18, 2021
இதன் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 15 புள்ளிகளைப் பெற்று சென்னையின் எஃப்சி 6ஆவது இடத்திலும், 12 புள்ளிகளுடன் ஈஸ்ட் பெங்கால் 9ஆவது இடத்திலும் நீடித்து வருகின்றன.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி!