ETV Bharat / sports

‘எங்க ஆட்டம் எப்பவும் வெறித்தனமா இருக்கும்’ - கால்பந்திலிருந்து காக்கிக்கு மாறிய இந்துமதி கதிரேசன்!

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் இந்தியக் கால்பந்து வீராங்கனை இந்துமதிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

Indian women team's footballer Indumathi Kathiresan serving nation as cop amid coronavirus crisis

author img

By

Published : May 27, 2020, 11:44 AM IST

Updated : May 27, 2020, 4:07 PM IST

இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர மிட்ஃபீல்டராக வலம்வருபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன். 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிவரும் இந்துமதி, தமிழ்நாடு காவல் துறையில் உதவி ஆய்வாளராகவும் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்று காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவொரு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்திய மகளிர் கால்பந்து அணியில் இந்துமதி கதிரேசன்

இதனால் விளையாட்டு வீரர்கள் தங்கள் நேரத்தை குடும்பத்தினருடனும், சமூக வலைதளங்களிலும் செலவிட்டுவரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் மட்டும் மக்கள் சேவைக்காக, காவல் பணியைத் தொடர்ந்து வருகிறார்.

இவர், சென்னை அண்ணா நகர் பகுதியில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக வைரலாகின.

உதவி காவல் ஆய்வாளராக இந்துமதி கதிரேசன்
உதவி ஆய்வாளராக இந்துமதி கதிரேசன்

இது குறித்து இந்துமதி கதிரேசன் கூறுகையில், "இது அனைவருக்கும் கடினமான நேரம். பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் கடைப்பிடிப்பதை உறுதிசெய்வதே எனது பணி. பாதுகாப்புப் பணியைத் தாண்டி என்னால் வேறு வேலைகளைச் செய்ய முடியவில்லை.

குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. சில சமயம் இரவு நேரங்களில் பணியாற்ற வேண்டிய நிலைமையும் வரும். கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது மூலம் இக்கட்டான சமயத்தில் நாட்டின் நன்மைக்காக உழைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான இந்துமதியின் புகைப்படத்தைக் கண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘இந்திய கால்பந்து அணிக்காக விளையாடும் இந்துமதி, தற்போது கரோனா பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுவதைக் கண்டு பெருமிதம் அடைகிறேன்’ என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • My heart swells with pride when I see our players like Indumathi who plays football for India and also perform duty wearing khaki uniform during #COVID19 pandemic! https://t.co/DRyJKTyJZB

    — Kiren Rijiju (@KirenRijiju) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்துமதி கதிரேசனின் இச்செயலுக்குப் பல்வேறு துறை பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:‘மீண்டும் பயிற்சிக்கு திரும்பியது மகிழ்ச்சி’ - ஆண்டர்சன்!

Last Updated : May 27, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.