ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து அனைத்து விதமான விளையாட்டுகளிலும் வீரர்களை கண்டறிவதற்காக கால்பந்து, கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டுவருகின்றன.
அந்த வகையில் இந்தியன் சூப்பர் லீக் (ISL) என்னும் கால்பந்து தொடர் இந்திய கால்பந்து அமைப்பின் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகின்றது. இதுவரை நடந்துமுடிந்த ஐந்து சீசன்களில் அட்லெடிகோ-டி-கொல்கத்தா அணியும், சென்னையின் எஃப்சி அணியும் தலா இருமுறை கோப்பையை வென்றுள்ளன.
-
Another action packed season awaits! 🙌#HeroISL 2019-20 kicks-off on 2⃣0⃣th October! 😎#LetsFootball pic.twitter.com/SREIP46JZz
— Indian Super League (@IndSuperLeague) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Another action packed season awaits! 🙌#HeroISL 2019-20 kicks-off on 2⃣0⃣th October! 😎#LetsFootball pic.twitter.com/SREIP46JZz
— Indian Super League (@IndSuperLeague) August 19, 2019Another action packed season awaits! 🙌#HeroISL 2019-20 kicks-off on 2⃣0⃣th October! 😎#LetsFootball pic.twitter.com/SREIP46JZz
— Indian Super League (@IndSuperLeague) August 19, 2019
கடந்த ஐந்தாவது சீசனில் பெங்களூரு எஃப்சி அணி கோப்பையை வென்றது. இதைத்தொடர்ந்து ஐஎஸ்எல்லின் ஆறாவது சீசனுக்கான தேதியை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் இந்தியன் சூப்பர் லீக்கின் (ISL) ஆறாவது சீசன் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கவுள்ளது எனவும், அதே நேரத்தில் ஐ-லீக் போட்டிகள் நவம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.