ETV Bharat / sports

ஐஎஸ்எல்: பெங்களூருவை பந்தாடியது ஏடிகே ! - இந்தியன் சூப்பர் லீக்

ஐஎஸ்எல் தொடரில் இன்று (பிப்.09) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

In Pics: ATK Mohun Bagan outclass Bengaluru FC 2-0

author img

By

Published : Feb 9, 2021, 11:08 PM IST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று (பிப்.9) நடைபெற்ற லீக் போட்டியில் ஏடிகே மோகன் பாகன் அணி பெங்களூரு எஃப்சி அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கம் முதலே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணிக்கு, 39ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாகப் பயனப்டுத்திய நட்சத்திர வீரர் ராய் கிருஷ்ணா கோலடித்து அசத்தினார்.

பின்னர் ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் ஏடிகேவின் மார்சலின்ஹோ லைட் பெரேரா கோலடிக்க அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் டிஃபென்ஸை வலிமையாக்கிய ஏடிகே அணி பெங்களூரு அணியின் கோலடிக்கும் அனைத்து முயற்சிகளையும் தவிடுபொடியாக்கியது.

இதனால் ஆட்டநேர முடிவில் ஏடிகே மோகன் பாகன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐஎஸ்எல் புள்ளிப்பட்டியலில் 33 புள்ளிகளைப் பெற்று ஏடிகே மோகன் பாகன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றோடு நடையைக் கட்டிய நகல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.