இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனுக்கான நேற்றைய லீக் ஆட்டத்தில் கோவா எஃப்.சி. அணி கேரள பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவா அணியின் ஹியூகோ பவுமஸ் 26ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து அந்த அணியின் ஜாக்கிசந்த் சிங் ஆட்டத்தின் 46ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்த கோவா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் ரஃபேல் மெஸ்ஸி ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் கோலடித்து கேரள அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். பின் ஆட்டத்தின் 69ஆவது நிமிடத்தில் அந்த அணியின் பார்தலோமெவ் ஒக்பேச் கோலடித்து ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார்.
இதன்மூலம் இவ்விரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்து சமநிலையில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கோவா அணியின் பவுமாஸ் ஆட்டத்தின் 83ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோல் அடித்து கோவா அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
-
Another goal-fest featuring @FCGoaOfficial 👏
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
📺 Check out all the 5⃣ goals from #FCGKBFC 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/B3PZa5M59f
">Another goal-fest featuring @FCGoaOfficial 👏
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2020
📺 Check out all the 5⃣ goals from #FCGKBFC 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/B3PZa5M59fAnother goal-fest featuring @FCGoaOfficial 👏
— Indian Super League (@IndSuperLeague) January 25, 2020
📺 Check out all the 5⃣ goals from #FCGKBFC 👇#HeroISL #LetsFootball pic.twitter.com/B3PZa5M59f
ஆட்டத்தின் இறுதியில், கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியது. இந்தப் பட்டியலில் கோவா அணி 27 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் மரண மாஸ் காட்டிய சென்னையின் எஃப்சி!