2003 முதல் 2016 வரை ஃபிஃபா கால்பந்து அமைப்பின் நிதி இயக்குநராக செயல்பட்டவர் மார்கஸ் கட்நர். 2015இல் ஃபிஃபாவின் செயலாளர் ஜெரோம் வால்கா நிதி முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மார்கஸ் கட்நர் ஃபிஃபாவின் தற்காலிக செயலாளராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், 2008 முதல் 2014 வரை தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து அப்போதைய ஃபிஃபாவின் தலைவர் செப் பிலாட்டர், மற்ற உறுப்பினர்களுக்கு கூடுதலாக ஊதிய உயர்வு வழங்கியது மட்டுமின்றி, மில்லியன் டாலர் கணக்கில் போனஸ் வழங்கியதும் தற்போது தெரியவந்தது.
இதனால் அனைத்து விதமான கால்பந்து நடவடிக்கைகளில் ஈடுபட அவருக்கு ஃபிஃபா அமைப்பு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும் 30 நாட்களுக்குள் ஒரு மில்லியன் ஸ்விஸ் ஃபிராங்க் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:டூப் சச்சினுக்கு கரோனா!