ETV Bharat / sports

கால்பந்து: பார்சிலோனா - லிவர்பூல் பலப்பரீட்சை! - Coutinho

பார்சிலோனா - லிவர்பூல் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறவுள்ளது.

கால்பந்து: பார்சிலோனா - லிவர்பூல் மோதல்
author img

By

Published : May 1, 2019, 10:45 PM IST

ஐரோப்பா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பார்சிலோனா (ஸ்பெயின்) - லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகளுக்கு இடையிலான முதல் கட்ட அரையிறுதிப் போட்டி இன்று கேம்ப் நெளவில் நடைபெறவுள்ளது.

பார்சிலோனா அணியை பொறுத்த வரையில், சொந்த மண்ணில் எப்பேற்பட்ட எதிரணிகளையும் வீழ்த்தும் அசாத்திய வல்லமை பெற்றது. அந்த அணி இறுதியாக 31 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் ஒரு தோல்வியை சந்திக்காமல் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அதேசமயம், லிவர்பூல் இந்தத் தொடரில், அவெ (எதிரணி மண்ணில் பெயர்ன் முனிச், போர்டோ) ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இதுமட்டுமின்றி, இவ்விரு அணிகள் சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இதுவரை நான்குமுறை மோதியுள்ளனர். இதில், பார்சிலோனா அணி இரண்டு வெற்றி, லிவர்பூல் ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஒரேயொரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

குறிப்பாக, பார்சிலோனா மண்ணில் லிவர்பூல் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு டிரா, ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால், இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருக்கும் போட்டி அனல் பறக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இரு அணிகளிலும் சிறந்த ஃபார்வார்ட் வீரர்கள் உள்ளனர். மெஸ்ஸி, சுவாரஸ், டெம்பளே, கோட்டின்ஹோ பார்சிலோனா அணியிலும், முகமது சாலாஹ், சாடியோ மானே, ஃபிர்மின்ஹோ லிவர்பூல் அணியிலும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி, லிவர்பூல் அணியின் நட்சத்திர தடுப்பு ஆட்டக்காரரான விர்ஜில் வான் மெஸ்ஸி எந்த அணியின் ஃபார்வர்ட் வீரர்கள் சிறப்பாக விளையாடி கோல் அடிப்பார்கள் என ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போட்டி இன்று நள்ளரிவு இந்திய நேரப்படி இரவு 12.30 மணியளவில் தொடங்குகிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.