ETV Bharat / sports

"ரொனால்டோவை யூரோ தொடரிலிருந்து பிரித்தெடுக்க முடியாது": டெரி ஃபெலனுடன் பிரத்யேக நேர்காணல் - மெஸ்ஸி

"கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு தேர்ந்த வீரர். அவரை தவிர்த்துவிட்டு யூரோ தொடரை நீங்கள் அணுகவே முடியாது", டெரி ஃபெலன் 'ஈடிவி பாரத்' செய்திகளுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ
author img

By

Published : Jun 21, 2021, 5:22 PM IST

மும்பை: மன்செஸ்டர் கால்பந்து அணியின் முன்னாள் வீரர் டெரி ஃபெலன் (TERRY PHELAN) 'ஈடிவி பாரத்'-க்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில் மெஸ்ஸி, ரொனால்டோ, இத்தாலி அணியின் எழுச்சி போன்றவை குறித்து மனத்திறந்துள்ளார்.

கேள்வி: யூரோ 2020 தொடரில் தற்போதுவரை உங்களை கவர்ந்த அணி எது?

பதில்: இத்தாலி அணி தோல்வியையே சந்திக்காமல் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு போட்டியில் கூட தோல்வியைத் தழுவவில்லை. ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் இத்தாலி அணி சிறப்பாக செயல்பட்டு, அவர்களை வீழ்த்தியது. அணி வீரர்களிடம் காணப்படும் ஒருங்கிணைந்த விளையாட்டினால், அவர்கள் அணி தனித்துவமாக நிற்கிறது.

என்னைப் பொறுத்தவரை, ராபார்டோ மான்சினி இத்தாலி அணியை முழுவதுமாக உருமாற்றியுள்ளார்.பழைய இத்தாலி அணியின் தாக்குதல் ஆட்டத்தை மீண்டும் அந்த அணிக்கு கற்றுக் கொடுத்துள்ளார். போர்ச்சுகல் அணியும் நல்ல ஃபார்மில் இருந்தாலும், அவர்களை விட இத்தாலி ஒருபடி மேலே நிற்கிறது.

பொறுத்திருந்து பார்போம், யூரோ 2020 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.

கே: உங்களை கவர்ந்த வீரர்?

ப: ரொனால்டோதான். 36 வயதிலும் அவரது ஆட்டம் பிரமிக்க வைக்கிறது. சில தினங்களுக்கு முன் போர்ச்சுகலுக்கு இரண்டு கோல்களை அடித்திருந்தார். அவர் ஒரு தேர்ந்த வீரர். அவரை தவிர்த்துவிட்டு யூரோ தொடரை நீங்கள் அணுகவே முடியாது

கே: இந்த யூரோ தொடரில் எந்த அணி பெரும் ஆச்சரியத்தை தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப: நாம் போர்ச்சுகல், பிரான்ஸ், இங்கிலாந்து அணிகளையே கவனித்து வருகிறோம். ஆனால், இத்தாலி அணிதான் தொடரில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். அவர்கள் அணியில் சிறந்த வீரர்கள் பலர் இருக்கம் நிலையில், அடுத்த சுற்றில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதுமானதுதான்.

இங்கிலாந்து அணியும் இத்தாலிக்கு போட்டியாக வரும் என்றாலும், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிறிய அணி எனும்பட்சத்தில் வேல்ஸ் அணி தொடரில் பெரும் ஆச்சரியத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

கே: வீரர்கள் மாதக்கணக்கில் தொடர்ந்து கிளப் அணிக்கு விளையாடிவிட்டு, தற்போது யூரோ 2020 போன்ற தொடர் நடக்கும் சுழலில், சகநாட்டு வீரர்களுடன் இணக்கமாக விளையாடுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

ப: இது ஒரு தொடர் போராட்டம். பெருந்தொற்று காலகட்டத்தில், வீரர்கள் விளையாட்டில் மிகவும் தேர்ந்தவர்களாக உருமாற வேண்டும். இது பெரிய பிரச்னையில்லை, வெளிநாடுகளில் தொடர்ந்து விளையாடுவது வீரர்களுக்கு புதிய கண்ணோட்டத்தைக் கொடுக்கும். அனைத்து போட்டிகளும் சுவாரஸ்மானவைதான்.

சொந்த நாட்டிற்காக விளையாடுவது பெரும் புத்துணர்ச்சியை அளிக்கும். அனைத்து வீரர்களுக்கும் தனது சொந்த நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். பலம் வாய்ந்த அணிகளை வெல்வதற்கு அனைவரும் கடினமாக விளையாட வேண்டும் அதனால்தான் யூரோ கோப்பை வெல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

கே: இவர் யூரோ கோப்பையில் விளையாடினால் நன்றாக இருக்குமே... என்றால் நீங்கள் யாரை கூறுவீர்கள்?

ப: எல்லாருக்கும் மெஸ்ஸி விளையாடினால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்,இல்லையா. ஆனால் அவர் அர்ஜென்டினா அணியை சேர்ந்தவர் ஆயிற்றே. நீங்கள் மெஸ்ஸி, நெய்மர் போன்ற வீரர்களை கோபா அமெரிக்கா தொடரில் பார்க்கலாம் யூரோவில் எதிர்பார்ப்பது வேடிக்கையானது. யூரோ தொடரிலும் நாம் பல அற்புதமான வீரர்களை கொண்டுள்ளோம் என்பதை மறக்கக்கூடாது.

இதையும் படிங்க: WTC FINAL: விடாமல் துரத்தும் மழை; இன்றும் தாமதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.