ETV Bharat / sports

இபிஎல்: அர்செனலைப் பந்தாடிய லிவர்பூல் 3-0 கோல் கணக்கில் வெற்றி - அர்செனல்

அர்செனல் அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றியின் மூலம் 30 போட்டிகள் விளையாடி 49 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது லிவர்பூல்.

Liverpool beat Arsenal
அர்செனல் அணியை வீழ்த்திய லிவர்பூல் அணி
author img

By

Published : Apr 4, 2021, 1:11 PM IST

லண்டன்: இபிஎல் 2020-21 சீசன் லீக் போட்டியில் லிவர்பூல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தியது.

உலகளவில் புகழ்பெற்ற இங்கிலீஷ் பிரிமியர் லீக் 2020-21 (இபிஎல்) சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. இதையடுத்து முன்னணி அணிகளான லிவர்பூல் - அர்செனல் இடையேயான லீக் போட்டி எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதியில் போட்டியின் 64ஆவது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் ஜோடா தனது அணிக்கான முதல் கோல் அடித்தார். இதன்பின்னர் அடுத்த நான்காவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் மற்றொரு வீரர் சலா அடுத்த கோல் அடித்தார்.

போட்டி முடிவதற்கு 22 நிமிடங்கள் மீதமிருந்த நிலையில் இரண்டாவது கோல் மூலம் தனது அணியின் வெற்றிவாய்ப்பைப் பிரகாசமாக்கினார். இதைத்தொடர்ந்து 82ஆவது நிமிடத்தில் ஜோடா இரண்டாவது கோல் அடித்ததன் மூலம், லிவர்பூல் அணி மூன்று கோல்களுடன் முன்னிலை வகித்தது.

முழு நேர ஆட்ட முடிவில் 3-0 என்ற கணக்கில் அர்செனல் அணியை லிவர்பூல் அணியினர் வீழ்த்தினர். இப்போட்டியில் 65 விழுக்காடு பந்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் லிவர்பூல் வீரர்கள். இதன்மூலம் தங்களுக்கு கிடைத்த ஏழு கோல் டார்கெட் ஷாட்களில், மூன்றை கோலாக மாற்றினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்செனல் அணி இத்தொடர் முழுவதும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. லிவர்பூல் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் 30 போட்டிகளில் 42 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

லிவர்பூல் அணி தனது அடுத்த போட்டியில் அஸ்டான் வில்லா அணியை ஏப்ரல் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதேபோல், ஷெஃபீல்டு யுனைடெட் அணியை ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது அர்செனல் அணி.

இதையும் படிங்க: கால்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்று : இத்தாலி ஹாட்ரிக் வெற்றி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.