இங்கிலீஷ் கால்பந்து லீக் தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அணி ஊழியர்கள் என 3,507 பேருக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனையின் முடிவில் வீரர்கள், அணி ஊழியர்கள் என 112 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 10 நாள்கள் தனிமைப்படுத்துதலில் வைக்கைப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து இஎஃப்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமீபத்தில் வீரர்கள், அணி ஊழியர்கள் என 3,507 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனை முடிவில், 112 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகிவுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: கோலாகோவின் அடுத்தடுத்த கோல்களால் ஹைதராபாத் வெற்றி!