இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரின் முக்கிய ஆட்டத்தில் மேன்செஸ்டர் யுனைடெட் அணி வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் அணி வீரர் சயித் பென்ரஹ்மா தனது அணிக்கு முதல் கோலை அடித்து மேன்செஸ்டர் அணிக்கு அதிர்ச்சி தந்தார்.
மீண்டும் கோலடித்த ரொனால்டோ
ஆனால், அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே வெஸ்ட் ஹாம் அணிக்கு மேன்செஸ்டர் அணி பதிலடி தந்தது. நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ யுனைடெட் அணிக்கு முதல் கோலை அடிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.
இரண்டாம் பாதியில் யுனைடெட் அணி தனது தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அது பலனளிக்கவில்லை.
திக் திக் வெற்றி
இந்த ஆட்டத்தின் 89ஆவது நிமிடத்தில் மேன்செஸ்டர் அணி வீரர் ஜெஸ்ஸி லிங்கார்டு கோலடிக்க 2-1 என்று என அந்த அணி முன்னிலைப் பெற்றது.
ஆனால், வெற்றி இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கையில் மேன்செஸ்டர் அணிக்கு மேலும் ஒரு சோதனை வந்தது. இறுதி நிமிடத்தில் அந்த அணி வீரரின் பவுல் காரணமாக, வெஸ்ட் ஹாம் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து.
ஆனால், அவ்வாய்ப்பை மேன்செஸ்டர் அணியின் கோல் கீப்பர் டேவிட் டிகாயா அபாரமாகத் தடுக்க, 2-1 என்ற கோல் கணக்கில் மேன்செஸ்டர் யுனைடெட் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் மேன்செஸ்டர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
-
🤖 Goal machine.#MUFC | @Cristiano pic.twitter.com/wayQiL87tn
— Manchester United (@ManUtd) September 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🤖 Goal machine.#MUFC | @Cristiano pic.twitter.com/wayQiL87tn
— Manchester United (@ManUtd) September 20, 2021🤖 Goal machine.#MUFC | @Cristiano pic.twitter.com/wayQiL87tn
— Manchester United (@ManUtd) September 20, 2021
மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் அண்மையில் இணைந்த நட்சத்திர வீரர் ரொனால்டோ, தான் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ந்து கோலடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேப்டனாக கடைசி தொடர் - விராட் கோலி அறிவிப்பு